டீன் ஏஜ் மனம் சிந்திக்கும் திறன் அற்றது: அது உணர்ச்சிகளின் சங்கமத்தால் ஆனது.அந்த மனம் முழுமையான வளர்ச்சி பெறாதது: எனவே இளைனர்களின் மனம் எப்போதுமே நல்ல திறமையான முடிவுகளை எடுப்பதில் தவறு இளைத்து விடுகிறது . ஒரு இளய்ஞன் உணர்ச்சிகளால் அலைய்களிக்கப்ப்படும்போது அவனது சிந்திக்கும் மனம் செயல் இழந்து விடுகிறது. இதனாலயே அவன் அதிக தவறுகளை செய்து விடுகிறான். இளைநர்கள் தங்களின் அடிப்படை குண இயல்புகளை தங்களின் பெற்றோர்களிடம் இருந்தே நேரடியாக கற்கின்றனர். அவர்களின் மனம் இலேசானது, மிருதுவானது மற்றும் பலவீனமானது. குடும்பத்தில் இருந்து தான் அவர்கள் பல விசயங்களை கற்கின்றனர். குடும்பம் தான் அவர்களின் முதல் கல்விசாலை ஆகும்.கடுமையான மன சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும் தாய்மார்களின் குழந்தைகள் தங்கள் தாய் மார்களின் உணர்சிகளை தங்களின் முகத்தில் அப்படியே பிரதிபலிக்கின்றன.இந்த குழந்தைகள் அதிக துக்கத்துடனும் கவலையுடனும், வருத்ததுடனும், சில நேரங்களில் கோபத்துடனும், பயத்துடனும் தான் படிக்கும் பள்ளிகளுக்கு வருகிறார்கள்.இவர்களால் சரியாக படிக்க முடிவதில்லை. படிப்பில் சிறந்த கவனம் செலுத்த முடிவதில்லை.இவர்கள் பொதுவாகவே பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். இந்த செயல் இவர்களை படிப்பில் பின் தங்க செய்கிறது. இவர்களே பின்னாழில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
No comments:
Post a Comment