டீன் ஏஜ் பருவ பிரச்சினைகள் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன. இன்றைய முற்றிலும் மாறுபட்ட நவீன சூழழில் வாழும் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். உடல் ரீதியாக ஏற்படும் நோய்களை விட மன ரீதியான நோய்களே இவ்வகை இளைனர்களை இப்போது அதிகம் பாதிக்கின்றன. இதனால் இவர்கள் சொல்லுனா துயறுத்துக்கு உள்ளாகிறார்கள். தங்களின் மன பிரசினைகளுக்கு தீர்வுகான இயலாமல் தத்தளிக்கிறார்கள். பெற்றோர்களிடமோ அல்லது மற்றோரிடமோ தங்கள் உள நல விசயங்களை பேச தயங்குகிறார்கள். ஆசிரியர்களும் சில நேரங்களில் இவர்களின் உற்ற நண்பர்களும் கூட இவர்களை சரியாக புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்தி விடுகின்றனர். அதிக மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் இவர்கள் சில நேரங்களில் போதை மருந்துகளுக்கும் மற்றும் குடி பழக்கத்துக்கும் உள்ளாகி அதிலிருந்து மீழ வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள்.
இவர்கள் எப்போதுமே அதிக சோர்வுடனும், மிகவும் சோகத்துடனும் இருப்பர். மிகவும் கவலை தோய்ந்த முகத்துடனும் சில நேரங்களில் அதிக கோபத்துடனும் காட்சி தருவர். இவர்கள் எப்போதுமே தங்களை பற்றி மிகவும் தாழ்வாகவே எண்ணுவர்.இதனால் பிறர் மேல் எப்போதுமே பொறாமை குணத்துடனும் சற்று காழ்புனற்சியுடனும் இருப்பர். பிறரை மதிப்பதில்லை: மரியாதையும் தருவதில்லை.இதனால் பிறர் சீற்றத்திற்கும் கோபத்திற்கும் இவர்கள் ஆட்படுவர்.
இவர்களை யாரும் தண்டித்தால் அவர்கள் மீது கடுங்கோபம் கொள்ளும் இவர்கள் அவர்களை தண்டிக்கவும் மேலும் வன்முறையில் ஈடுபடுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை. அதிக மன சோர்வுக்கும் மன அதிர்வுக்கும் ஆளாகும் இவர்கள் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்குவதில்லை.
இக்கால சிறுவர்களும் சரி, இளைனர்களும் சரி, இன்றைய சூழலுக்கு தங்களை உட்படுத்த இயலாமல் திண்டடுகிண்டனர். தொழில் நுட்பம் அதிகம் சூழும் இவ்வுலகில் அதி நவீன தொழில் நுட்ப முறைகளும் இவர்கள் வாழ்கையில் புகுந்து விளையாடுகிண்டன. இதனால் இவர்கள் அதிக மன தாக்கத்துக்கு ஆளாகிறார்கள். மனித உறவுகள் சீர்கெட்டு விடுகிண்டன.வாழ்கையில் தோல்வி பயம் இவர்களை பிடித்து ஆட்டுகிறது. படிப்பில் கவனம் இழக்கும் இவர்கள் குறிக்கோளை அடைய இயலாமல் முழு தோல்வியில் விழுகின்றனர்.
டீன் ஏஜ் கிளினிக் இந்த இளைனர்களின் பிரச்சினைகளுக்கு நல்ல ஒரு வழியை காட்டுகிறது.இது பற்றி மேலும் காண்போம் .
No comments:
Post a Comment